மும்பை: கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, மகாராஷ்டிரா அரசு மதிய உணவு திட்டத்தில் மீண்டும் முட்டையை சேர்த்துள்ளது. பள்ளிக்கு வரும் ஏழைக் குழந்தைகள் பசியின்றி படிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம் தற்போது நாடு முழுவதும் பரவலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிராவில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளிகளிலும் மதிய உணவு திட்டம் அமலில் உள்ளது.இந்நிலையில், 2023-ல் 50,000 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை முட்டை வழங்கும் திட்டத்தை மகாராஷ்டிரா அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், சில அமைப்புகளின் எதிர்ப்பால், மதிய உணவில் முட்டை வழங்கும் திட்டம், 2025 ஜனவரி 28-ல் கைவிடப்படும் என, அரசு அறிவித்தது.
மத்திய உணவில் முட்டையை நிறுத்துவதால், புரதச்சத்து குறைவால், மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்படும் என, கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து, புதிய கல்வியாண்டு முதல் மதிய உணவு திட்டத்தில் முட்டை மற்றும் வாழைப்பழங்களை மகாராஷ்டிர அரசு சேர்த்துள்ளது. இத்திட்டத்திற்கான நிதி ரூ.50 கோடியில் இருந்து ரூ.100 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தாதாஜி அறிவித்துள்ளார்.