சென்னை : அமலாக்க துறையின் அதிகார துஷ்பிரயோகம் தான் இது என்று இயக்குனர் வுங்கர் தெரிவித்துள்ளார்.
தனது சொத்துக்களை முடக்கி, அமலாக்கத்துறை அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாக இயக்குநர் ஷங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தனக்கு எந்த தகவலையும் முன்னரே வழங்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், இந்த நடவடிக்கைகளை அதிகாரிகள் இத்துடன் நிறுத்தாவிட்டால் சட்டரீதியில் மேல்முறையீடு செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்.
எந்திரன் பட காப்புரிமை விவகாரத்தில், ஷங்கரின் ₹10 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.