புதுடில்லி: அமெரிக்கா நிதி தந்ததாக கூறப்படும் விவகாரத்தில் இந்தியாவின் உளவு அமைப்பெல்லாம் என்ன செய்தது என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
பிரதமர் மோடியை தோற்கடிக்க அமெரிக்கா நிதி தந்ததாக கூறப்படும் விவகாரத்தில், இந்திய உளவுத்துறையும், ரா அமைப்பும் என்ன செய்தன? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லியில் பேட்டியளித்த பவன் கெரா, மோடி ஆட்சியில் வெளிநாட்டு நிதி இந்தியாவிற்குள் வரமுடிகிறது என்றால், அது பாஜக முகத்தில் விழுந்த அறைதானே? என விமர்சித்துள்ளார்.
முன்னதாக Ex பைடன் அரசு, ரூ.182 கோடி நிதி வழங்கியதாக USA அதிபர் டிரம்ப் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.