பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றிருந்த நிலையில், உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அதிபர் புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ரஷ்ய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று ஆஸ்திரியா சென்றுள்ள அவருக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரண்டு நாள் ரஷ்யா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று காலை மாஸ்கோவில் இருந்து ஆஸ்திரியா சென்றார். அலெக்சாண்டர் வான் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெக்கம்மர் இருவரும் பிரதமர் மோடியை வரவேற்றனர் மற்றும் மூவரும் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தியா மற்றும் ஆஸ்திரியா இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட பல பேச்சுவார்த்தைகள் இன்று நடைபெறும் என்றும், சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.