சென்னை: நள்ளிரவில் போலீஸ் வாகனங்கள் சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வடக்கு மண்டல போலீஸ் ஜாயிண்ட் கமிஷனர் ஆபீஸூக்குள் புகுந்து மர்ம நபர் தாக்குதல் நடத்தியுள்ளார். போலீசாரின் 3 வாகனங்கள், வெளியில் இருந்த ஒரு வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிவிட்டு அந்த நபர் தப்பிச் சென்றார்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தாக்குதல் நடத்திய சிதம்பர பாண்டியன் என்பவர் கைதாகியுள்ளார். நள்ளிரவில் தாக்குதல் நடந்தது போலீஸையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.