புதுடெல்லி: புதுடெல்லி ரயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு மேற்கொண்டார்.
புதுடெல்லி ரயில் நிலையத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பிறகு பேசிய அவர், பயணிகள் முன்பதிவு டிக்கெட் வைத்திருந்தால் நேரடியாக ரயில் நிலையத்துக்கு அனுப்பப்படுவார்கள் என்றார்.
பயணிகளின் பாதுகாப்பில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு இந்த ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.