அசாம்: அசாமில் பழங்குடியினர் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று அவர்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சியை கண்டு ரசித்தார்.
அசாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு தேயிலை தோட்ட பழங்குடியினரின் ‘ஜுமோயிர் பினாந்தினி’ நிகழ்சியில் பங்கேற்றார்.
தேயிலை தோட்டம் தொடங்கி 200வது ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தவகையில், அங்கு கவுஹாத்தி மைதானத்தில் தேயிலை தோட்ட பழங்குடியினர் சுமார் 9,000 பேர் பங்கேற்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சியை அவர் கண்டு ரசித்தார்.