சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நேரில் ஆஜராக சீமானுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சீமானுக்கு அனுப்பியுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 வாரத்துக்குள் வழக்கை முடித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது