நாக்பூர் : ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் இன்று விதர்பா – கேரளா அணிகள் மோதுகின்றன. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
90வது ரஞ்சி கோப்பையை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இந்த போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது.
விதர்பா அணி 3வது முறையாகவும், கேரளா முதல் முறையாகவும் கோப்பையை கையில் ஏந்த போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இந்த போட்டியை பார்ப்பதற்கு ரசிகர்கள் வெகு எதிர்பார்ப்புடன் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.