மதுரை : ஒரு மணி நேரத்தில் 700 பயணிகளை கையாளுகிறது மதுரை விமான நிலையம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான போக்குவரத்து அமைச்சகம் மதுரை விமான நிலையம் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, ‘மதுரை விமான நிலையத்துக்கு ஒரு வாரத்துக்கு 140 விமானங்கள் வந்து செல்கின்றன. ஒரு மணி நேரத்தில் இந்த விமான நிலையம் உள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் 700 பேரை கையாளுகிறது.
இதன்மூலம் ஓராண்டில் சுமார் 1.50 மில்லியன் பயணிகள் மதுரை விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மதுரை விமான நிலையத்தின் பெருமையை பறைசாற்றுகிறது.