புதுடெல்லி: தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் ரகசிய கூட்டம் நடத்தப்பட்டதாக வெளியான தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவோயிஸ்டுகளை ஒடுக்க நாடு முழுவதும் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக தான் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் தேடப்பட்டு வந்த பண்ணைபுரம் கார்த்திக் சிக்கினார். அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரிக்க, கேரளாவில் பதுங்கிய ராகவேந்திரா பிடிபட்டார்.
தலைவராக செயல்பட்ட இவர் வேலூரிலும், கேரளாவின் கண்ணூரிலும் ரகசிய கூட்டங்கள் நடத்திய அதிர்ச்சி தகவல் என்ஐஏ விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது.