நாமக்கல்: நாமக்கலில் முட்டை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை நேற்று 30 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.60ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல், இன்றும் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 40 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் முட்டை கொள்முதல் விலை ரூ.4.60இல் இருந்து ரூ.4.20ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சில்லரை விலையிலும் முட்டை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சில்லரை கடைகளில் முட்டை ஒன்று ரூ.4.50 முதல் ரூ.5 வரை விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.