2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பொருளாதார நிபுணர்களுடன் முக்கிய சந்திப்பை நடத்தினார்.
18வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து மத்தியில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தது. மக்களவைத் தேர்தல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, ஜூலை, 23ல், பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளார்.பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து, பொருளாதார நிபுணர்களுடன், டில்லியில், பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஆலோசனை நடத்தினார். . இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டார். நிர்மலா சீதாராமனின் ஏழாவது மத்திய பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.