புதுடெல்லி: அடுத்த ஆண்டு கேரள சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இதற்காக, கேரள காங்கிரஸ் தலைவர்களுடன் தனது பழைய புகைப்படத்தை பகிர்ந்து கொண்ட அவர், “ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி அவர்கள் ஒன்றாக நிற்கிறார்கள்” என்று எழுதினார்.
காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “காங்கிரஸ் தலைவர்கள் அரசியல் வியூகத்தை மனதில் கொள்ள வேண்டும். கட்சிக் கொள்கைக்கு முரணான அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்” என்றார். பிரதமர் மோடி மற்றும் கேரளாவில் உள்ள இடதுசாரி அரசை காங்கிரஸ் எம்.பி சசி தரூர் புகழ்ந்து பேசும் போதே ராகுல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.