சென்னை: நீங்க பேசினால் கருத்துரிமை… அதுவே நாங்க பேசினால் அவதூறா… என்று கொந்தளித்துள்ள சீமான் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் முன்னாள் மறைந்த முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசியதற்காக கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, கள்ளச்சாராயம் மீது பாயாத வழக்குகள் எல்லாம் மேடையில் பேசியவர்கள் மீது பாய்கிறது. சாட்டை துரைமுருகனை எதற்காக கைது செய்தீர்கள். என்னை விட அவர் சற்று அதிகமாக பேசிவிட்டார்.
என்னை சுற்றி இருப்பவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி கொடுக்கிறீர்கள். அவரை முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய தவறாக பாடிய காரணத்திற்காக கைது செய்துள்ளனர். ஏற்கனவே இருந்த பாட்டை பாடுவதில் என்ன தவறு இருக்கிறது. பாடல் எழுதியவரை விட்டுவிட்டு மறுபடியும் பாடியவரை கைது செய்துள்ளீர்கள்.
அதே பாடலை நானும் பாடுகிறேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள். மேலும் திமுக பேசினால் கருத்துரிமை. அதுவே எதிர்க்கட்சிகள் பேசினால் அவதூறா என்று கூறினார்.