மும்பை: 10 நாட்கள் சரிவுக்குப் பிறகு, பங்குச் சந்தை குறியீடுகள் 1.25% உயர்ந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 818 புள்ளிகள் உயர்ந்து 73,809 புள்ளிகளில் வர்த்தகமானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 27 நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 278 புள்ளிகள் அதிகரித்து 22,361 புள்ளிகளாக உள்ளது.
இந்திய பங்குச்சந்தைகளும் ஆசிய பங்குச்சந்தைகளின் உயர்வை உணர்கின்றன. கனேடிய மற்றும் மெக்சிகோ ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை அமெரிக்கா குறைக்கலாம் என அமெரிக்க அமைச்சர் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கினா ரைமண்டோவின் அறிவிப்பு, கட்டணப் போரின் தீவிரத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா, மஹிந்திரா பங்குகள் 4.5%, பவர்கிரிட், அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல் பங்குகள் 4% உயர்ந்து வர்த்தகமாகின்றன. என்டிபிசி பங்குகள் 3.8%, டாடா மோட்டார்ஸ் பங்குகள் 3%, டெக் மஹிந்திரா பங்குகள் 2.97% உயர்ந்து வர்த்தகம் செய்யப்படுகிறது. பார்தி ஏர்டெல், கோடக் வங்கி, இன்ஃபோசிஸ், ஹெச்டிஎப்சி டெக், டிசிஎஸ், மாருதி சுஸுகி பங்குகள் விலை ஏற்றத்தில் உள்ளன.