புதுடெல்லி: குஜராத் மாநிலத்தில் இருந்து இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
2023 ஆம் ஆண்டில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 241 பேர் இந்தியக் குடியுரிமை வேண்டாம் என்று கூறி இந்திய அரசிடம் பாஸ்போர்ட்டை ஒப்படைத்தனர். 2022 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை 2 மடங்கு அதிகமாகும். 2022ல் 241 பேர் இந்திய குடியுரிமையை துறந்தனர்.
இந்த ஆண்டு மே மாதம் வரை மட்டும் அந்த மாநிலத்தில் இருந்து 244 பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். 2014 முதல் 2022 வரை குஜராத்தில் இருந்து மட்டும் 22,300 பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர்.
டெல்லி (60,414) முதலிடத்திலும், பஞ்சாப் (28,117) இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்திய குடியுரிமை வேண்டாம் என்று சொல்பவர்களில் பெரும்பாலானோர் 30 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடியுரிமை பெறுகிறார்கள்.