கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி கனடாவின் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், நாட்டின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாங்க் ஆஃப் கனடாவின் முன்னாள் கவர்னர், நாட்டின் தற்போதைய நிதி சவாலான சூழலில் பிரதமராக அவர் நியமனம் கவனத்தை ஈர்க்கிறது. மார்க் கார்னி 2008 முதல் 2013 வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராக பணியாற்றினார்.
இவர் 2011 முதல் 2018 வரை நிதி நிலைத்தன்மை வாரியத்தின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து கனடா பல்வேறு பொருளாதார சவால்களை சந்தித்து வருகிறது. டிரம்ப் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை பரஸ்பர வரி விதிப்பை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார். இதன் விளைவாக, கனடாவும் அமெரிக்க பொருட்களின் மீதான வரிகளை நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன என்று அந்நாட்டு அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். முன்னதாக டிரம்ப் ட்ரூடோவுக்கு எதிராக அரசியல் ரீதியாக காய்களை நகர்த்தி வந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
லிபரல் கட்சியின் தலைமைப் போட்டியில் முன்னாள் பெடரல் ரிசர்வ் தலைவர் மார்க் கார்னி வெற்றி பெற்றதாக கட்சியின் தலைவர் சச்சித் மெஹ்ரா அறிவித்தார். தலைமைப் போட்டிக்கு மார்க் கார்னி 1,31,674 வாக்குகள் பெற்றார். இது மொத்த வாக்குகளில் சுமார் 85.9 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் ஆற்றிய வெற்றி உரையில், “டொனால்ட் டிரம்ப் வர்த்தகப் போரைத் தொடரும் வரை அமெரிக்கப் பொருட்களின் மீதான பரஸ்பர வரியை கனடா கைவிடாது. கனேடிய அரசு சரியான பாதையில் செல்கிறது.
அமெரிக்கா எங்களுக்கு உரிய மரியாதை அளித்து நம்பகமான மற்றும் நியாயமான வர்த்தகத்தை உறுதி செய்யும் வரை நாங்கள் விதித்துள்ள வரிகள் அமலில் இருக்கும்” என்றார். அமெரிக்க பரஸ்பர வரிக்கு அடிபணிய மாட்டேன் என்று அவர் கதறுவது கவனம் பெறுகிறது.