மகாராஷ்டிராவின் அகோலா நகரில் உள்ள தாய்பால் வங்கி மூலம் இதுவரை 3,800 குழந்தைகள் பயனடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், “அகோலா நகரில் ஆகஸ்ட் 2021-ல் தாய்பால் வங்கி தொடங்கப்பட்டது. மாவட்ட மகளிர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள இந்த தாய்ப்பால் வங்கி மூலம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 3,816 பச்சிளம் குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
இந்த மாவட்ட மகளிர் மருத்துவமனையில் ஆண்டுதோறும் வாசிம், புல்தானா உள்ளிட்ட அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த 12,000-க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்தாலும், அவர்களால் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடிவதில்லை. உடல் ஊனம், பலவீனம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ காரணங்களால் இந்நிலை ஏற்படுகிறது.

இந்தக் குறைபாட்டைப் போக்க, 2021-ல் தொடங்கப்பட்ட யசோதா தாய் பால் வங்கி மூலம் ஏராளமான குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. வங்கி தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 3,612 பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ளனர். மொத்தம் பெறப்பட்ட 714 லிட்டர்களில், 3,816 பிறந்த குழந்தைகளுக்கு 708 லிட்டர் தாய்ப்பால் வழங்கப்பட்டுள்ளது.