குழந்தை பிறந்த பிறகு, பெண்களின் வாழ்க்கை முற்றிலும் மாறிவிடும். பிறந்த குழந்தை அவர்களின் உலகமாக மாறிவிடும். குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயதுவரை தாய்ப்பாலே முக்கிய உணவாக இருக்க வேண்டும். தாய்ப்பால்தான் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. எனவே, தாய்ப்பாலின் அளவை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெரும்பாலும் பெண்கள் எளிதில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களை சாப்பிடாமல் புறக்கணிக்கின்றனர். ஆனால் அவை குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், ஆக்சிஜனேற்றிக்களை கொண்டுள்ளன.

மகப்பேறு மருத்துவர் நித்யா கூறும் படி, சில பழங்கள் தாய்ப்பாலின் உற்பத்தி அதிகரிக்க மிகவும் உதவுகின்றன. ஸ்ட்ராபெர்ரி அதிகளவில் விட்டமின் சி கொண்ட பழமாகும். இது உடலின் நீர் மேலாண்மையை சீராக வைத்திருக்க உதவுகிறது. அதனால், தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க ஸ்ட்ராபெர்ரி மிகவும் பயனுள்ளது.
அதேபோல், சப்போட்டா ஆற்றல் அளிக்கும் ஒரு முக்கிய பழமாகும். தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு, பால் கொடுக்கும் போது ஏற்படும் வாந்தி, மயக்கம், குமட்டல் போன்றவற்றை சமாளிக்க அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த ஆற்றலை சப்போட்டா பழம் தருகிறது.
ப்ளூபெர்ரி அதிக அளவில் ஆன்டிஆக்சிடண்ட்களும் சிட்ரஸ் அமிலங்களும் கொண்ட பழமாகும். இதன் மூலம், தாய்ப்பாலில் அதிகமான ஆன்டிஆக்சிடண்ட்கள் செல்லும், இது குழந்தைகளுக்கான கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.
வாழைப்பழம் உடலில் திரவ சமநிலையை பராமரிக்க உதவுகிறது, ஏனெனில் இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு வாழைப்பழம் மிக முக்கியமான உணவாகும்.
பச்சை பப்பாளி, தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரிக்கும் சிறந்த பழமாகும். இது பால் உற்பத்தி அதிகரிக்கும் மேலும், ஆற்றல் மற்றும் முக்கிய வைட்டமின்கள் வழங்குகிறது.
பரங்கிக்காய், தாய்ப்பாலில் போதுமான ஊட்டச்சத்துக்கள் சேர்க்க உதவுகிறது. இது பலவிதமான ஊட்டச்சத்துக்களுடன் நிறைந்த பழமாக, அம்மாவின் உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
அவோகேடாவில் உள்ள ஒமேகா-3, -6, மற்றும் -9 கொழுப்புக்கள், தாய்ப்பாலின் உற்பத்தி அதிகரிப்பதோடு குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
இந்த அனைத்து பழங்களும் தாய்ப்பாலூட்டும் அம்மாக்களுக்கு அதிக ஆற்றலை, ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, குழந்தைகளுக்கும் நல்ல சுகாதாரத்தை காக்க உதவுகிறது.