சென்னை : ஹோலி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சில மாநிலங்களில் இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் இன்று நடக்க உள்ள சிபிஎஸ்இ தேர்வை எழுத முடியாதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.
ஹோலி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. மேலும் சில மாநிலங்களில் இன்று (மார்ச் 15) கொண்டாடப்படவுள்ளது.
இதனால் இன்று நடைபெறவுள்ள சிபிஎஸ்இ இந்தித் தேர்வுகளில் அந்த மாநில மாணவர்களால் பங்கேற்க முடியாது. இதனால் சிபிஎஸ்இ மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.
இதற்கிடையில் மாணவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக சிபிஎஸ்இ நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:
அத்தகைய மாணவர்கள் பயப்படத் தேவையில்லை, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்புத் தேர்வுகளின்போது இவர்கள் அந்த தேர்வுகளை எழுதலாம் எனக் கூறியுள்ளது. இதனால் மாணவர்கள் அச்சத்தை விளக்கிக் கொள்ளலாம்.