சென்னை: முந்திரியின் பரப்பு, உற்பத்தியை அதிகரிக்கவும், முந்திரி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், முந்திரி தொழில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கவும் தமிழ்நாடு முந்திரி வாரியம் ரூ.10 கோடியில் அமைக்கப்படும்.
சுவைதாளிதப் பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்க ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்களை மாவட்டங்களில் 2,500 ஏக்கரில் சீமைக்கருவேலை மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடியை மேற்கொள்ள ரூ.11.74 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
ரூ.1 கோடியில் உதிரிவகை ரோஜா மலர்களின் சாகுபடி 500 ஏக்கரில் மேற்கொள்ள நறுனண ரோஜாவுக்கான சிறப்புத் திட்டம் உருவாக்கப்படும்.
ரூ.1.60 கோடியில் பாரம்பரிய மல்லிகை சாகுடியை அதிகரிக்க மல்லிகைக்கான சிறப்புத் திட்டம் உருவாக்கப்படும்.
விவசாயிகளின் நிலையான வருமானம் ஈட்டும் வகையில் மலர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.8.51 கோடி ஒதுக்கீடு
வெங்காயத்தின் விளைச்சல் குறையும் காலங்களில் சந்தைக்கு நிலையான வரத்தினை உறுதிப்படுத்திடும் பொருட்டு வெங்காய சேமிப்புக்கூடங்கள் ரூ.18 கோடியில் அமைக்கப்படும்.
ரூ.2.4 கோடியில் பாரம்பரிய காய்கறி ரகங்களின் சாகுபடியை 2,500 ஏக்கரில் மேற்கொள்ளப்படும்.
ரூ.1,168 கோடியில் நீர் ஆதாரத்தை திறம்பட பயன்படுத்துவதற்காக, மூன்று லட்சம் ஏக்கர் பரப்பில் நுண்ணீர்ப் பாசனம் திட்டம் செயல்படுத்தப்படும்.