சென்னை : உடல்நிலை பாதிக்கப்பட்டு இசை அமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக இன்று காலை முதல் இணையங்களில் செய்தி வைரலானது.
இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி தமிழகத்தில் காட்டு தீ போல் பரவியது. இதில் அவருக்கு இதய வலி என்றும், பல காரணங்கள் குறித்தும் வதந்திகள் பரவி வந்தன.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் உடல்நிலை குறித்து அப்போலோ அறிக்கை வெளியிட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் உடல்நிலை குறித்து சென்னை அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், நீர்ச்சத்து குறைபாடு காரணமாகத்தான் அனுமதிக்கப்பட்டதாக ஹாஸ்பிடல் தெரிவித்துள்ளது.
சில பரிசோதனைகளுக்குப் பின் அவர் வீடு திரும்பினார் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் தற்போது ஆசுவாசமடைந்துள்ளனர்.