கேரளா: மோகன்லால் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கிடைக்க உள்ளது. எதனால் தெரியுங்களா?
2019ல் இயக்குநராக அவதாரம் எடுத்த நடிகர் பிரித்விராஜ், மோகன்லாலை வைத்து ‘லூசிபர்’ படத்தை எடுத்தார். அரசியல் கேங்ஸ்டர் பின்னணியில் உருவான அப்படத்தை மலையாளம் மட்டுமல்லாமல், தமிழிலும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
வசூலிலும் இந்த படம் சக்கை போடு போட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடித்த மம்முட்டியை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் இந்த படத்தின் 2ஆம் பாகமான ‘எம்புரான்’ வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் எம்புரானுக்கு முன்பு, மீண்டும் ஒருமுறை பார்க்கும் வகையில் வரும் 20ம் தேதி லூசிபர் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. இது மோகன்லால் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.