மேஷம்: சின்ன சின்ன வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்தி நல்ல பலனை அடைவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் பழைய பொருட்கள் விற்கப்படும்.
ரிஷபம்: பொதுக் காரியங்களில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். சேமிப்பு அதிகரிக்கும்.
மிதுனம்: எதையும் தாங்கும் ஆற்றல் பெறுவீர்கள். பணவரவு மற்றும் பொருள் வரவு இருக்கும். எதிர்ப்பு, ஏமாற்றுதல்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்த உறவுகள் ஆதரவாக இருப்பார்கள்.
கடகம்: தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சகோதரர்கள் உங்களுக்கு ஆதரவாக நிற்பார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சுமூகமாக நடக்கும்.

சிம்மம்: பழைய நிகழ்வுகளை நினைத்து மகிழ்வீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பம் ஏற்படும். அரசு மற்றும் வங்கித் துறையில் அனுகூலங்கள் உண்டாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும்.
கன்னி: கல்வித் தகுதியை உயர்த்துவீர்கள். அறிஞர்களின் நட்பைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய பொறுப்புகள் உங்களை தேடி வரும்.
துலாம்: தேவையற்ற கவலைகள், குழப்பங்கள், மன அழுத்தம் வந்து நீங்கும். எந்த சூழ்நிலையிலும் அமைதியை இழக்காதீர்கள். நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்கவும். ஆன்மீகத்தில் உங்கள் ஈடுபாடு அதிகரிக்கும்.
விருச்சிகம்: தைரியமாகச் செயல்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களுடன் பழகுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
தனுசு: எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளும் மன முதிர்ச்சி பெறுவீர்கள். நல்ல நண்பர்களைப் பெறுவீர்கள். மனதில் நம்பிக்கை பிறக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பிள்ளைகளால் மன அமைதி உண்டாகும்.
மகரம்: சோர்வு, களைப்பு நீங்கி தன்னம்பிக்கை, உற்சாகத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வீடு, மனை விற்பது, வாங்குவது லாபகரமாக இருக்கும்.
கும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். ஆன்மிகம் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் குவிந்த பொருட்கள் விற்கப்படும்.
மீனம்: வெளி வட்டாரத்தில் யாரிடமும் வீண் பேச்சு பேச வேண்டாம். குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுப்பது நல்லது. வியாபாரத்தில் நிதானம் தேவை. ஆன்மிகம் மற்றும் தியானத்தில் ஆர்வம் இருக்கும்.