புதுடில்லி: மக்களை இந்த தேதிகளில் உஷாராக இருங்கள். வங்கி சேவைகள் 4 நாள்கள் முடங்கும் அபாயம் உள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?
வாரத்தில் 5 நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதற்கு முந்தைய 2 நாள்கள் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமையாக உள்ளன. இதனால், 4 நாட்கள் வங்கி சேவைகள் முடங்க வாய்ப்புள்ளது. அதனால், பொதுமக்கள் தங்களது வங்கி பணியை வரும் 22ம் தேதியே முடித்துக் கொள்வது நல்லது.
எனவே மறந்து விடாதீர்கள் வங்கி பணிகளை குறித்து வைத்துக் கொண்டு செயல்படுங்கள்.