சபரிமலை ஐயப்பன் கோவில் மாதாந்திர பூஜைக்காக கடந்த 14-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அங்கு கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக இருந்ததால் ஐயப்ப பக்தர்கள் சிரமப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர் மழை தீவிரமடைந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் பத்தனம்திட்டா, ஆலுவா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.