சென்னை : நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.அண்மையில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் மிக வைரலான கோல்டன் ஸ்பாரோ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் பிரியங்கா மோகன் சிறப்பு நடனமாடியுள்ளார்.
இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை படக்குழு அறிவித்து உள்ளது. திரைப்படம் வரும் மார்ச் 21 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது இதனால் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கின்றனர்.