தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு – 2 டீஸ்பூன்
தயிர் – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
சீரகத் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
கிரேவிக்கு…
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு – சுவைக்கேற்ப
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
தண்ணீர் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
பன்னீர் – 200 கிராம்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், லேசாக நிறம் மாறும் வரை கிளறி ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்கு குளிர வைக்க வேண்டும். கடலை மாவு நன்கு குளிர்ந்ததும், அதில் புளிக்காத தயிர், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் கலந்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு ஒருசேர கிளறி விட வேண்டும். பின்பு அதில் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். 5 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் பன்னீரை கைகளால் உதிர்த்து விட்டு, 2 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்கினால், சுவையான தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி கிரேவி தயார்.