PAN கார்டு என்பது ஒரு நபரின் எல்லாவிதமான பொருளாதார சம்பந்தப்பட்ட பரிமாற்றங்களை கண்காணிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும். ஒரு வங்கிக் கணக்கு திறப்பது முதல் இன்கம் டேக்ஸ் ரிட்டன் (ITR) தாக்கல் செய்வது வரை PAN கார்டை ஒரு ஆவணமாக பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல் டிரான்ஸாக்ஷன் காரணங்களுக்காக செய்யப்படும் KYC சரிபார்ப்பிற்கு PAN கார்டு பயன்படுத்தப்படுகிறது.
மேலும் PAN கார்டு ஒரு முக்கியமான சட்டப்பூர்வமான அடையாள அட்டையாகவும் திகழ்கிறது. ஆதார் கார்டு புழக்கத்திற்கு வந்த பிறகும் கூட ஒரு நபரின் பொருளாதார வரலாற்றை கண்காணிப்பதற்கு ஆதார் அட்டையை PAN கார்டுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் PAN கார்டுக்கு காலாவதி தேதி ஏதும் உள்ளதா? எத்தனை நாட்களுக்கு ஒருவர் தன்னுடைய PAN கார்டை செல்லுபடியாகும் ஆவணமாக பயன்படுத்தலாம்? இது போன்ற கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
PAN கார்டை யார் வழங்குகிறார்கள்?
PAN கார்டு என்பது NSDL (National Securities Depository Limited) மூலமாக வழங்கப்படுகிறது. PAN கார்டு உங்களுடைய அனைத்து பொருளாதார பரிமாற்றங்களையும் கண்காணிப்பதால் இது ஒரு சட்டப்பூர்வமான ஆவணமாக அழைக்கப்படுகிறது. PAN கார்டு ஒரு நபரின் பணம் சம்பந்தப்பட்ட டிரான்சாக்ஷன்கள் அனைத்தையும் வெளிப்படையாக காட்டுவதால் வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பிப்பதை தவிர்க்க உதவுகிறது.
ஆனால் இது எத்தனை நாட்களுக்கு செல்லுபடி ஆகும் என்பது குறித்த தகவல்களை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.
PAN கார்டு செல்லுபடியாகும் கால அளவு
PAN கார்டின் செல்லுபடியாகும் தன்மை என்பது ஒரு நபரின் வாழ்நாள் முழுவதும் அளிக்கப்படுகிறது. ஒரு நபர் இறந்த பிறகு அவருடைய PAN கார்டு கேன்சல் செய்யப்படும் அல்லது ஒரு நபரின் இறப்பு சான்றிதழை பயன்படுத்தி தேவையான எல்லா இடங்களிலும் KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம்.
ஒரு நபர் இறந்த பிறகு அவருடைய PAN கார்டு காலாவதி ஆகிறது.
PAN கார்டு என்பது எண்கள் மற்றும் எழுத்துக்கள் அடங்கிய 10 இலக்க வடிவம் ஆகும். இது கார்டு ஹோல்டர் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது. ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட PAN கார்டை வைத்திருக்கலாமா? சட்டரீதியாக, ஒரு நபர் ஒரு PAN கார்டு மட்டுமே வைத்திருக்க முடியும். ஒன்றுக்கும் மேற்பட்ட PAN கார்டுகளை வைத்திருப்பவர்களுக்கு அரசு அபராதத்தை விதிக்கும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட PAN கார்டை கொண்டிருப்பது விதிமீறல் செயல் ஆகும்.
வருமான வரி விதிகளின்படி, ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட PAN கார்டுகளை வைத்து அதனை பயன்படுத்தி வரும்பட்சத்தில், அது சட்டவிரோதமான செயலாக கருதப்படுகிறது. வருமான வரிச்சட்டத்தில் உள்ள பிரிவு 272B இன் கீழ், ஒன்றுக்கும் மேற்பட்ட PAN கார்டை வைத்திருப்பவர்களுக்கு 10,000 ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படுகிறது.
ஒருவேளை உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட PAN கார்டு இருந்தால் அதனை நீங்கள் ஆப்லைன் மற்றும் ஆன்லைன் முறையில் அரசிடம் திருப்பி ஒப்படைத்து விடலாம். PAN கார்டை எவ்வாறு பெறுவது? PAN கார்டை நீங்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்துப் பெறலாம்.
இதற்கு முதலில் நீங்கள் அதிகாரப்பூர்வ இ-ஃபைலிங் போர்ட்டலுக்கு சென்று, அங்குள்ள ‘Instant PAN through Aadhaar’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதன்பிறகு ‘Get New PAN’ என்பதை தேர்ந்தெடுங்கள். இப்போது உங்களுடைய ஆதார் நம்பரை வழங்குங்கள். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள OTP-ஐ என்டர் செய்யவும். நீங்கள் என்டர் செய்த OTP சரியானது என்பது உறுதி செய்யப்பட்டதும், உங்களுக்கு உடனடியாக e-PAN வழங்கப்படும். மேலும் இதனை கையில் ஒரு அட்டையாக பெறுவதற்கும் நீங்கள் ஆர்டர் செய்யலாம்.