தேவையான பொருட்கள்:
வரகு மாவு, பச்சரிசி – தலா 40 கிராம்
உளுந்து மாவு – 20 கிராம்
ஓமம், எள்ளு – தலா 1 கிராம்,
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
மாவு வகைகளை ஒன்றாகக் கலந்து, ஓமம், எள்ளு, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். எண்ணெய் சூடானதும் முறுக்கு அச்சில் மாவை இட்டுப் பிழிந்து பொரித்தெடுக்கவும்.