தங்கவயல்: தங்கவயல் நீதிமன்றத்தில் நேற்று நடந்த லோக் அதாலத்தில் நிலுவையில் உள்ள 3,340 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. குடும்ப நல வழக்குகள், சாலை விபத்து, குடிநீர், மின்சார பில் பாக்கி, ஆர்டிஓ, வழக்குகள், காப்பீடு, வங்கி காசோலை மோசடி, நில தகராறு, பரம்பரை சொத்து தகராறு, தங்கவயல் நீதிமன்றத்தில் 2023 மார்ச் 1 முதல் பிறப்பு-இறப்பு சான்றிதழ் ஆகியவை 7,685 வழக்குகளில் நிலுவையில் உள்ளன.
இவற்றில் 3,442 வழக்குகள் சமரச முயற்சியில் லோக் அதாலத் மூலம் தீர்வுக்காக சமர்ப்பிக்கப்பட்டன. இதில் 3,340 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதற்காக 6 இடங்களில் விசாரணை நடத்தப்பட்டது. மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதியிடம் நிலுவையில் உள்ள 379 வழக்குகளில் 28 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 18 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம், 43 லட்சத்து 53 ஆயிரத்து 246 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது
l முதன்மை மூத்த சிவில் நீதிபதியிடம் நிலுவையில் உள்ள 1,490 வழக்குகளில் 680 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 653 வழக்குகள் தீர்க்கப்பட்டன. இதன் மூலம், 43 லட்சத்து 52 ஆயிரத்து 400 ரூபாய் தீர்வாக கிடைத்தது
l கூடுதல் மூத்த சிவில் நீதிபதியிடம் நிலுவையில் உள்ள 1,775 வழக்குகளில் 609 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 605 வழக்குகள் தீர்க்கப்பட்டன. இதன் மூலம் 2 கோடியே 19 லட்சத்து 35 ஆயிரத்து 95 ரூபாய் தீர்வாகியது
l முதன்மை சிவில் நீதிபதியிடம் நிலுவையில் உள்ள 1,594 வழக்குகளில், 1,137 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 1,113 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் 97 லட்சத்து 98 ஆயிரத்து 744 ரூபாய் தீர்வாகியது
l கூடுதல் சிவில் நீதிபதியிடம் நிலுவையில் உள்ள 1,269 வழக்குகளில் 574 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 558 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் 13 லட்சத்து 88 ஆயிரத்து 300 ரூபாய் தீர்வாகியது
l கூடுதல் சிவில் நீதிபதியிடம் நிலுவையில் உள்ள 1,178 வழக்குகளில் 414 வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அதில் 393 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் 7 லட்சத்து 68 ஆயிரத்து 443 ரூபாய் தீர்வாகியது. தங்கவயலில் நேற்று நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்ச்சியில் நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.