தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வி இயக்குனரின் 100 நாள் சவால் திட்ட செயல்பாடுகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதன்படி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அய்யாக்கண்ணு, மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரமேஷ் குமார், வட்டார கல்வி அலுவலர்கள் இளவேணி, சங்கீதா, அம்பிகா, மனோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமௌலி ஆகியோர் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை உள்ள மாணவர்களின் தமிழ் ஆங்கிலம் கணிதம் பாடங்களில் மாணவர்களின் கற்றல் குறித்து ஆய்வு செய்தனர்.
மாணவர்களிடம் கற்றல் திறன் குறித்து பரிசோதித்தனர். மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் வாசிப்புத் திறனையும், கணித செயல்பாடுகளையும் உற்சாகத்துடன் செய்தனர்.
இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி செய்திருந்தார்.