By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உலகளாவிய ராணுவ செலவினம் 2887 பில்லியன் டாலரை எட்டியது
    1 Min Read
    110 கிலோ கஞ்சா கடத்தி வந்த 22 பௌத்த துறவிகள் கைது
    2 Min Read
    சிக்கன் கேம் போல் தான் அமையும்… கடல் வழி திறப்பு குறித்து கருத்து
    2 Min Read
    மெட்டா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு… என்ன தெரியுங்களா?
    1 Min Read
    அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பற்றி வெளியான தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து புதுச்சேரி கலெக்டர் தகவல்
    2 Min Read
    தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்
    3 Min Read
    பானிபூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பால் பரபரப்பு
    1 Min Read
    மிக சிறந்த மருத்துவ மூலிகை முடக்கத்தானால் ஏற்படும் நன்மைகள்
    2 Min Read
    மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா ? தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
    வெங்காயத்தாளில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
    வயிற்று உபாதைகளை சரி செய்யும் ஓமத்தின் மருத்துவ குணங்கள்!
    1 Min Read
    உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும் ஆரஞ்சு பழத்தின் விதைகள்
    1 Min Read
    அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய தர்பூசணி அளிக்கும் நன்மை
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஆக்ராவுக்கு தாஜ்மஹாலு… ஒரத்தநாட்டுக்கு முத்தம்மாள் சத்திரமுங்க
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சுற்றுலா > ஆக்ராவுக்கு தாஜ்மஹாலு… ஒரத்தநாட்டுக்கு முத்தம்மாள் சத்திரமுங்க
சுற்றுலா

ஆக்ராவுக்கு தாஜ்மஹாலு… ஒரத்தநாட்டுக்கு முத்தம்மாள் சத்திரமுங்க

Nagaraj
Last updated: April 9, 2025 6:17 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

இந்தியாவின் கட்டிடக்கலைஞர்கள் உலக புகழ்பெற்றவர்கள். அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் இன்றும் நம்மவர்களின் திறமைக்கு எடுத்துக்காட்டாக பிரமாண்டமாக, வலுவாக நிலைத்து நிற்கிறது. அதிலும் தமிழகத்தில் கோயில்கள், மாட மாளிகைகள், அரண்மனைகள், சத்திரங்கள் என்று திரும்பும் இடமெல்லாம் வரலாற்று பொக்கிஷங்கள்தான். அண்ணாந்து பார்க்க வைக்கும், அதிசயப்பட வைக்கும் வகையில் நுணுக்கமான கலைத்திறனோடு வடிவமைக்கப்பட்ட அந்த கால கட்டிடங்கள் நம்மவர்கள் ஜாம்பவான்கள் என்று நிரூபிக்கின்றன.

கருங்கல்லா… காரையும், சுண்ணாம்புமா, செங்கல் வைத்து கட்டணுமா என அனைத்திலும் கைவண்ணத்தை காட்டி கலையம்சத்தோடு கட்டியிருக்காங்க. அப்படி அம்சமாக கட்டப்பட்ட ஒன்றுதான் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள மிகவும் பழமையான முத்தம்மாள் சத்திரம்.

தஞ்சாவூரை மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்த கிபி.1743 முதல் 1837 வரை கட்டிடக்கலைக்கு தகுந்த மரியாதை அளித்துள்ளனர். கட்டிட வல்லுனர்களின் திறமைகளை வெளி கொணர்ந்துள்ளனர். பெரிய, சிறிய சத்திரங்களை தஞ்சாவூர் முதல் தனுஷ்கோடி வரை அமைத்துள்ளனர் என்றால் பார்த்துக்கோங்க. அப்படி கட்டப்பட்ட சத்திரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எதுன்னு தெரிஞ்சுக்குவோம். தஞ்சாவூரில் காஞ்சி வீடு சத்திரம், சிரேயஸ் சத்திரம், சூரக்கோட்டையில் சைதாம்பாள்புரம் சத்திரம், ராசகுமரபாயி சத்திரம், ஒரத்தநாட்டில் முத்தம்மாள் சத்திரம், பட்டுக்கோட்டை காசங்குளச் சத்திரம், மணமேல்குடி திரௌபதாம்பாள்புரம் சத்திரம், மீமிசலில் ராசகுமாரம்பாள் சத்திரம், ராமேசுவரத்தில் ராமேசுவரம் சத்திரம். தனுஷ்கோடியில் சேதுக்கரை சத்திரம் என தஞ்சை- தனுஷ்கோடி வரை 20 சத்திரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இதில் ஒரத்தநாட்டில் உள்ள முத்தம்மாள் சத்திரம் முத்தம்மாள் என்பவரின் நினைவாக 1800-ல் இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்டதாம். யாருங்க அந்த முத்தம்மாள் என்கிறீர்களா. இரண்டாம் சரபோஜி மன்னரின் முதல் மனைவியான முத்தம்மாள் சிறு வயதிலேயே இறந்துவிட்டார் அவர் இறப்பதற்கு முன்பு சத்திரம் ஒன்றை அமைக்கும்படி மன்னரிடம் வேண்டிக்கொண்டார். அவருடைய நினைவாக 1800-ல் இரண்டாம் சரபோஜி மன்னரால் இந்த முத்தம்மாள் சத்திரம் கட்டப்பட்டது என இங்குள்ள மராட்டிய கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதுதாங்க இந்த சத்திரத்தோட பின்னணி. அதாவது ஆக்ராவில் எப்படி ஷாஜகான் தாஜ்மஹாலை கட்டினாரோ… அதே போல ஒரத்தநாட்டில் கட்டப்பட்டது இந்த முத்தம்மாள் சத்திரம் என்று தங்களின் ஊர் பெருமையை உரக்க சொல்கின்றனர் ஒரத்தநாடு மக்கள்.

யாத்திரை செல்லும் வழியில் யாத்ரீகர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் தேவையான உணவு, உறைவிடத்துடன் கூடியதாக இந்தச் சத்திரம் இருந்துள்ளது. அழகிய தோரண அமைப்புடைய யானை, குதிரை பூட்டிய தேர் சக்கர வாயில் பகுதியும், தூண்கள் தாங்கி நிற்கும் பெரிய முற்றங்களும், ஆங்காங்கே சிவலிங்கமும், மேல்தளத்தில் அழகிய வேலைப்பாட்டுடன் மரத்தால் அமைக்கப்பட்ட தூண்களும், நீர் நிறைந்த கிணறும் மாறாத பழமையை நமக்கு பறைசாற்றுகின்றன.

சத்திரமாகவும் பின்னர் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் பள்ளிக்கூடமாகவும் தொடர்ந்து விடுதி மாணவர்கள் தங்குமிடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பொக்கிஷங்கள் எப்போதும் நமக்கு ஆச்சரியத்தை அளிப்பதைதானே. அதுபோல்தான் கட்டிடக்கலையின் பொக்கிஷங்களான நம் முன்னோர்கள் கட்டிய பழமையான கட்டிடங்கள் நம்ம ஊருக்கு தனி ஸ்பெஷல்தானே. வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் ஒரத்தநாடு வழியே செல்லும் போது நம்ம ஊரு தாஜ்மஹாலாம் முத்தம்மாள் சத்திரத்தையும் விசிட் அடித்துவிட்டு செல்கின்றனர்.

You Might Also Like

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நைனி ஏரி

கேரளாவிற்கு சென்றால் இந்த இடங்களை மிஸ் செய்யவே கூடாது

புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏற்ற தென்னிந்திய சீரப்புஞ்சி வால்பாறை!

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல ஆசையா?

சுற்றுலா செல்ல உலகில் உள்ள சிறந்த கடற்கரை நகரங்கள்

TAGGED:AncestorsarchitectureMuthammal InnTouriststreasureகட்டிடக்கலைசுற்றுலாப்பயணிகள்பொக்கிஷம்முத்தம்மாள் சத்திரம்முன்னோர்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா ? தெரிந்து கொள்ளுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?