இஸ்லாமாபாத்: இம்ரான் கானின் பி.டி.ஐ கட்சிக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியை அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக கருதி தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் தகவல்துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார், இம்ரான் கானின் பி.டி.ஐ கட்சிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து விரைவில் தடைவிதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
கிரிக்கெட் வீரராக இருந்த இம்ரான் கான், அரசிலுக்கு வந்த பிறகு 1996ஆம் ஆண்டு பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியை நிறுவி 2018ல் ஆட்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.