மும்பை: மும்பை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டியை நேரில் காண சென்ற மும்பை மாவட்ட நீதிபதியின் செல்போன் மைதானத்தில் திருடப்பட்டது.
பிரீமியர் கிரிக்கெட் தொடரில் 50 சதவீத போட்டிகள் தற்போது முடிந்துள்ளன. கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்ற மும்பை – ஐதராபாத் அணிகளின் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியை காண தெற்கு மும்பை மாவட்ட நீதிபதி ஒருவர் வான்கடே மைதானத்திற்கு சென்றிருந்தார். அப்போது, அவருடைய ஐபோன் 14 மாடல் செல்போன் மர்ம நபர் ஒருவரால் திருடப்பட்டது.
இது தொடர்பாக அவர் ஆன்லைன் வழியாக புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.