
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஃபென்சல் புயலால் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை மதிப்பீடு செய்து உடனடியாக நிவாரண உதவி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் விவசாயம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மூலம் பயிர் சேத விவரங்களை கணக்கிட்டு வருகின்றனர்.
அதன்பேரில், சித்தலூர் கிராமத்தில் சேதமடைந்த பருத்தி, உளுந்து வயல், முடியனூர் கிராமத்தில் மரவள்ளிக் கிழங்கு, பாசார் கிராமத்தில் உளுந்து, ஒகையூர் கிராமத்தில் சோள வயல் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நில வருவாய் இயக்குநர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். சேத விவரங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்ததோடு, சேத மதிப்பீடு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

அதன்பின், மதுசூதன் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், டிச., 3-ம் தேதி நிலவரப்படி, 1,08,856 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டு, அதில் 50,314 ஹெக்டேர் விளை நிலங்கள் உள்ளன. இவற்றில் 33 சதவீதத்திற்கும் அதிகமான, 35,532 ஹெக்டேர் பரப்பளவு பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கணக்கெடுக்கும் பணி விரைவில் முடிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். ஒகையூர் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சோளப்பயிர்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மதுசூதன் ரெட்டி, கலெக்டர் பிரசாந்த் ஆகியோர் ஆய்வு செய்தனர்.