தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே கம்பர் நத்தம் கிராமத்தில் ஆலை கரும்பு சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த இந்த ஆலை கரும்புகளை இயந்திரத்தின் மூலமாக அறுவடை செய்யப்பட்டு டிராக்டர்கள் மூலம் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்திரத்தின் மூலம் அறுவடை பணிகள் நேரத்தையும், வேலை ஆட்கள் கூலியும் குறைந்துள்ளது என விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.
இந்த அறுவடைப்பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். தற்போது வெயில் காலம் என்பதால் உடனடியாக கரும்புகளை அறுவடை செய்து ஆலைக்கு அனுப்பும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.