தஞ்சாவூர்: கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்ய விதைகள் சேகரிக்கின்றனர் விவசாயிகள்.
தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை அருகே மருங்குளம், ஏழுப்பட்டி, வாகரக்கோட்டை, மின்னாத்துர், திருக்கானூர்பட்டி, கோபால்நகர் உள்ளிட்ட மேட்டுப்பகுதியிலும், பொய்யுண் டார்கோட்டை, செல்லம்பட்டி, ஆதனக்கோட்டை போன்ற ஊர்களில் உள்ள மேட்டு நிலங்களிலும் கார்த்திகை மாதம் முன்பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்வதற்காக அதற்கான விதைகளை அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம், அம்பாவூர், முத்துவாஞ்சேரி உள்ளிட்ட பல ஊர்களுக்கு சென்று விவசாயிகள் வாங்கி வருகின்றனர்.
இந்த விதைகள் 50 கிலோ கொண்ட ஒரு பை ரூ.4200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்கி – வந்து விவசாயிகள் சுத்தம் செய்து வருகின்றனர். விதை விதைக்கும் நிலங்களை நன்கு உழவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கார்த்திகை மாத முதல் வாரத்தில் மழை பெய்யாத பட்சத்தில் விதைகள் விதைக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.