சென்னை: இந்தியாவில் பார்க்க வேண்டிய முக்கியமான இரண்டு கோயில்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நம்முடைய இந்தியா மிகவும் அழகான ஆன்மீகமான நாடு. இந்தியாவில் உள்ள கோவில்கள் மிகப்பெரிய அழகான மலைகளில், அடர்ந்த காட்டு பகுதிகளுக்குள், மிகவும் நெரிசலான தெருக்களுக்குள், கடற்கரைகளில் அருகில் இப்படி ஏராளமான இயற்கை சூழல்களில் ஒன்றிணைந்து இந்த கோவில்கள் காணப்படுகின்றன.
இப்படிப்பட்ட கோவில்களை நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும். அப்படி மிகவும் பிரபலமாக உள்ள இரண்டு கோவில்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இமயமலையில் உத்தரகண்ட் பகுதியில் அமைந்துள்ள பத்ரிநாத் கோவிலானது விஷ்ணு பகவானுக்கான இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான கோவில். இந்த கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,248 அடி உயரத்தில் உள்ளது. இது வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இமயமலையின் எலும்பை ஊடுருவும் கடுமையான குளிர் காரணமாக ஆண்டின் ஏப்ரல் மாதத்திலிருந்து நவம்பர் மாதம் தொடக்கம் வரை மட்டுமே கோவில் திறந்திருக்கும். இந்த கோவில் 9 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான முக்கியமான கோவில்களில் ஒன்று ராமநாத சுவாமி கோவில். இந்த கோவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள மூலவர் ராமநாத சுவாமி. பித்ருதோஷ நிவர்த்தி தலமாக இந்த ராமநாத சுவாமி கோவில் இருக்கிறது.
ராவணனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமபிரான் இங்கு வழிபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.