சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில் கோவில் நிர்வாகம் வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்தும் அடர் வெள்ளை வர்ணம் அடித்துள்ளனர். இது வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும் அதிக சூடுதாக்குவது இல்லை எனவும் பக்தர்கள் தெரிவித்தனர்.
சென்னிமலை முருகன் கோவிலில் தினமும் 6 கால பூஜைகள் நடக்கிறது. மேலும் தொடர்ந்து திருவிழா வந்து கொண்டுள்ளது. உள்ளூர், வெளியூர் பக்தர்கள் பள்ளி விடுமுறை தினம் ஆதலால் குழந்தைகளுடன் வந்த பூஜைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்கின்றனர்.
தற்போது தார் சாலை பணி நடப்பதால் பக்தர்கள் இரு, நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை. தற்போது குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் மட்டும் செல்கிறது. புரட்டாசி மாதமாக இருந்தாலும், வெயில் தாக்கத்தில், சூடாகி நடக்க மிகவும் சிரமப்பட்டனர்.
மேலும் கோவில் பிரகாரத்திலும் நடைபாதை கற்கள் சூடாகி, பக்தர்களின் பாதங்களை பதம் பார்த்தது. இதனால் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டனர். இதையறிந்த கோவில் நிர்வாகம் வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்தும் அடர் வெள்ளை வர்ணம் அடித்துள்ளனர். இது வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும் அதிக சூடுதாக்குவது இல்லை எனவும் பக்தர்கள் தெரிவித்தனர்.