கேரளா: பிரசித்தி பெற்ற சபரிமலையில், ஆண்டுதோறும் மண்டல, மகரவிளக்கு பூஜை, மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெறுவது வழக்கம். மகரவிளக்கு பூஜையின் போது ஆன்லைனில் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பூஜை காலத்தில் தினமும் 80,000 பேர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது, எந்தப் பாதையில் புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதைத் தேர்வுசெய்ய உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் தரிசனத்துக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதில், சபரிமலையில் டிசம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் 50,000 பக்தர்கள் மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 50,000 பக்தர்கள் மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மேற்கண்ட நாட்களில் ஸ்பாட் புக்கிங் கிடையாது என்றும் தேவசம்போர்டு தெளிவுபடுத்தியுள்ளது.