தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா அய்யாவாடியில் அமைந்துள்ள அங்காளபரமேஸ்வரி ஆலயத்தின் கரகம் எடுத்துச்செல்லும் திருவிழா நடந்தது.
இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அந்த வகையில் கரகம் எடுத்துச் செல்லும் திருவிழா நடந்தது.
விழாவையொட்டி பக்தர்கள் ஆற்றில் இருந்து கரகம் எடுத்து சென்று கரகம் நீரில் விடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு பக்தர்கள் வீதிகளில் சுற்றி வந்து கரகத்தில் நீர் விட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கரகம் எடுத்தனர். பின்னர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
தொடர்ந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி சிறப்பு அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். இதில் பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.