தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சக்கராப்பள்ளியில் அமைந்துள்ள தேவநாயகி அம்பாள் உடனுறை சக்கரவாகேஸ்வரர் கோயிலில் சப்தஸ்தானவிழாவை ஒட்டி, சுவாமி நேற்றிரவு பூத கன வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.
இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலின் உப கோவிலாகவும், தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகவும் விளங்கும் இந்தக் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலுக்கு வந்து வேண்டிக் கொண்டால் அந்த வேண்டுதல் நிறைவேறுகிறது என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவுடன் பக்தர்கள் மீண்டும் இந்த கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.