திருமலை: தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், சுமார் 2 கி.மீ. 20 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வார இறுதி நாட்களிலும் திருவிழாக்களிலும் கூடுதலான பக்தர்கள் வருகை தருகின்றனர். தீபாவளி பண்டிகை மற்றும் வழக்கமான விடுமுறை காரணமாக திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் 67,785 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 27,753 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியல்களாக ரூ.2.38 கோடி செலுத்தினர்.
தொடர் விடுமுறை மற்றும் சனிக்கிழமை என்பதால் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. இதனால் வைகுண்டம் கியூ வளாக அறைகள் நிரம்பி வழிகின்றன. சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள ஏடிஜிஹெச் கட்டிடத்தை அடைய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.