திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலில் இன்று காலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆன்மீக சுற்றுலா தலமாகவும் சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது.
இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதாலும், ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இன்று காலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.