மேஷம்: சுப வீட்டு நிகழ்ச்சிகளில் பிரபலங்கள் பங்கேற்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையைப் பின்பற்றுவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்: சொத்து விஷயங்களில் கவனம் தேவை. எடுத்த வேலையை முடிக்க போராடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். ஆன்மீகம், தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபாடு இருக்கும்.
மிதுனம்: மனதில் உற்சாகம், தைரியம் ஏற்படும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் நீங்கும். பணப் பிரச்சனைகளைச் சமாளிக்க வழி காண்பீர்கள். வியாபாரத்தில் முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கடகம்: எதிர்மறை எண்ணங்கள் விலகும். பிரபலங்களின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணப் பேச்சு வார்த்தைகள் நல்லபடியாக முடிவடையும்.
சிம்மம்: குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அவர்கள் விரும்பும் பொருட்களை வாங்கித் தருவீர்கள். தொழிலில் பணியாளர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
கன்னி: முக்கியமான பணிகளை சுறுசுறுப்புடனும், துல்லியமாகவும் முடிப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு குடும்பத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் பழைய பொருட்கள் விற்கப்படும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.
துலாம்: எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் மதிப்பைப் பெறுவீர்கள். தொழில் பங்குதாரர்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள்.
விருச்சிகம்: கைமாறாக கேட்ட பணம் கிடைக்கும். சொத்து பிரச்சனைகள் தீரும். வீட்டு விசேஷங்களில் பிரபலங்கள் பங்கேற்பார்கள். உங்களால் ஆதாயம் அடைந்த சிலர் உங்களை சந்திப்பார்கள்.
தனுசு: நீங்கள் எடுத்த காரியம் தடைகளை மீறி நிறைவேறும். வியாபாரத்தில் போட்டி இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். அரசு மற்றும் வங்கி கடன் உதவி சற்று தாமதமாகும். யாரிடமும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.
மகரம்: சவாலான பணிகளைச் செய்து பாராட்டு பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்வார்கள்.
கும்பம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பழைய நண்பர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். தாயாரின் மருத்துவச் செலவுகள் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
மீனம்: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை அடையாளம் கண்டு நீக்குவீர்கள். உங்கள் குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் தந்தை வழி உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். பல வழிகளிலும் செல்வத்தைப் பெறுவீர்கள்.