திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரம் பக்தர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கலப்பட நெய் பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்திய தேவஸ்தானம், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ‘நந்தினி’ நெய்யை வாங்கி பயன்படுத்துகிறது. திருப்பதியில் லட்டு பிரசாத விற்பனை சற்றும் குறையவில்லை.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஏழுமலையானையை 66,986 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அவர்களில் 26,163 பேர் மொட்டை அடித்து முடி செலுத்தியுள்ளனர். அவர்கள் ரூ.5.05 கோடியை உண்டியல் மூலம் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.