தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலம் பகுதியில் அமைந்துள்ள காத்தாயி அம்மன் திருக்கோயிலில் நேற்று மாலை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பங்குனி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம். வகையில் நேற்று கபிஸ்தலம் காத்தாயி அம்மன் கோயிலில் நடந்த சிறப்பு வழிபாடு மற்றும் அர்ச்சனைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் அந்த சுற்று வட்டார பகுதியைச் சார்ந்த ஏராளமான பெண்கள் ஆலயத்திற்கு வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து, தீபம் ஏற்றி வழிபட்டனர்.
பின்னர் அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.