
திருவனந்தபுரம்: சபரிமலையில் தோலிக்கு ப்ரீபெய்ட் கட்டணம் அமல்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினம், டோலி தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தோளியில் பயணிக்க வேண்டிய பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
டோலி தொழிலாளர்களின் இந்த திடீர் போராட்டத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், முரளிகிருஷ்ணா ஆகியோர் கூறியதாவது:- சபரிமலையில் தோளிக்கு குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் மண்டல காலம் தொடங்கும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு தொழிலாளர்கள் கொண்டு சென்றிருக்க வேண்டும்.
சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் மிகுந்த சிரமத்துடன் வருகின்றனர். இதுபோன்ற திடீர் வேலை நிறுத்தம் அவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். புனிதமான சபரிமலையில் இதுபோன்ற தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அதிகாரிகள் கவனமாக செயல்பட வேண்டும்.

சபரிமலையில் பக்தர்களுக்கு வசதிகள் செய்து தருவதில் பல அதிகாரிகள் மிகுந்த சிரமத்துடன் பணியாற்றி வருகின்றனர். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். புல்மேடு பாதை மீண்டும் திறக்கப்பட்டது கனமழையை தொடர்ந்து குமுளியில் இருந்து முக்குழி, சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலை செல்லும் வனப்பாதை 2 நாட்களாக மூடப்பட்டது.
இந்நிலையில் மழை ஓய்ந்ததையடுத்து நேற்று முதல் பக்தர்கள் மீண்டும் இந்த பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த பாதை வழியாக நேற்று 581 பக்தர்கள் சபரிமலைக்கு சென்றனர்.